Friday, July 13, 2012

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது.- ஜகத் ஜயசூரிய

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கில் சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமாதானம் மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் படையினரின் கடமைகள் இராணுவ முகாம்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும். சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்ய மாட்டார்கள்.

அரசாங்க அதிகாரிகள் கோரினால் மட்டும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வடக்கில் ஏதேனும் ஓர் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டுமாயின் அதனை தீர்மானிக்கப் போவது நானே என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment