“இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது என்று முடிவு செய்தாயிற்று. ஆனால், எந்த ரூட்டில் போவது என்பதில்தான் குழப்பம். காரணம், எல்லா பாதைகளிலும் ஏதோ ஒரு தடை இருக்கிறது” தி.மு.க. தலைவரின் இன்றைய நெருக்கடி பற்றி இவ்வாறு சொன்னார் அவருக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர்.
டெசோ மாநாடு தேதி நெருங்க, நெருங்க, தி.மு.க. வட்டாரங்களில் பதட்டம்தான் அதிகமாக உள்ளது.
தமக்கு நெருக்கமான, ஈழ விவகாரத்தில் குரல்கொடுக்கும் பிரமுகர்களை அடிக்கடி அழைத்துப் பேசுகிறார் கருணாநிதி. “என்னை என்னதான் செய்ய சொல்றாங்க? ஈழத்தை பெற்றுத்தர ஆயுதப் போராட்டம் மீண்டும் துவங்கும் என்று சொன்னால், புலிகள் அழிந்தது போதாது என்று மீதி தமிழர்களையும் கருணாநிதி அழிக்க வந்துட்டாரு என்று குரல் கொடுக்கிறாங்க.
நிதானமாக சிந்தித்து, சாத்வீகமாக செயல்படுவோம் என்று சொன்னா, எங்கேய்யா ஈழம் என்று கேட்கிறாங்க” என்பதைதான், அவர் அனைவரிடமும் சொல்கிறார் என்கிறார்கள், அவரை சந்தித்துவிட்டு வந்தவர்கள்.
“எப்படியோ, டெசோ மாநாடு பற்றி அறிவிப்பு வெளியிட்டாகி விட்டது. யாரையாவது அழைத்து நடத்தியே ஆகவேண்டும்” என்பதுதான் நிலைமை.
கருணாநிதிக்கு நெருக்கமான இரண்டு பிரமுகர்கள் கையில் ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு, எலகத் தமிழ் அமைப்புகளை ஒவ்வொன்றாக தொடர்பு கொண்டவாறு உள்ளார்கள். மறுமுனையில் கிடைக்கும் ரெஸ்பான்ஸ், குண்டுவீச்சு போல உள்ளது!
“போகிற போக்கில், உலகத் தமிழ் அமைப்புகளும் இல்லாமல், இலங்கை தமிழர்களும் இல்லாமல், கட்சி மாநாடு போல நடத்த வேண்டிய நிலை வந்துவிடும் போலிருக்கிறது” என்றார், உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியில் உள்ள ஒரு பிரமுகர்.
“யார் வருவாங்க? என்று கேள்வி இருந்தா பரவாயில்லை. ‘யாராவது வருவாங்களா?’ என்று கேள்வி எழுந்தா… கதை கந்தல்தான்!”
No comments:
Post a Comment