Saturday, July 07, 2012

இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படக் கூடாது. - ஜெயலலிதா -



இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்படக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் பகுதியில்அளிக்கப்பட்ட பயிற்சி தற்போது பங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டள்ளது. குறித்த இலங்கை விமானப்படை உத்தியோகத்தர்களை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தாம்பரத்திற்கு பதிலாக பங்களூரில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை படையினரை நாடு கடத்துமாறும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும் ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்திடம் மீளவும் கோரியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சேர்ந்துள்ள ஆளும் காங்கிரஸ் கூட்டணி தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழக தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு யுத்தக் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment