Tuesday, July 31, 2012

பிரபாகரன் உயிரோடு இருந்தபோதே கலைஞர் தமிழர்களை காக்கவில்லை பின் டெசோ எதற்கு?


இலங்கையில் தமிழர்கள் எல்லாம் இறந்த பிறகு டெசோ மாநாடா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் நேற்று 30ம் திகதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- தி.மு.க. தலைவர் டெசோ மாநாடு நடத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் செத்தபிறகு டெசோ மாநாடா? டெசோ மாநாடு மதுரையில் நடந்தபோது என்ன என்று தெரியுமா? மாநாட்டுக்கு யார்? யார்? எல்லாம் வந்தார்கள் என்று தெரியுமா? தமிழர்கள் அனைவரும் செத்த பிறகு ஏன் டெசோ மாநாடு பற்றி பேசுகின்றீர்கள்.
பிரபாகரன் உயிரோடு இருந்தபோதே இலங்கை தமிழர்களை கருணாநிதி காப்பாற்றவில்லை. இனிமேல் டெசோ மாநாடு நடத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகின்றார்களாம். தனி ஈழம் அடைந்தே தீருவேன் என்று கருணாநிதி கூறினார்.
4 நாட்களுக்கு பிறகு தனி ஈழம் குறித்து டெசோ மாநாட்டில் பேச மாட்டேன் என்று கூறுகிறார். இப்படி எல்லாம் நான் பேச மாட்டேன். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

No comments:

Post a Comment