இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியொன்றில் பங்குபற்றச் சென்ற இலங்கையர்கள் மூவரை ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கைக்குத் திரும்பிச் செல்லுமாறு சுற்றுப்போட்டி ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி நகரில் இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. மேற்படி இலங்கையர்கள் நேற்றிரவு போட்டியில் பங்குபற்றவிருந்தனர். எனினும் மேற்படி ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அவர்களை இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இலங்கையர்கள் இப்போட்டியில் பங்குபற்றுவது தொடர்பாக ஏற்பாட்டாளர்களிடம் பெரியார் திராவிட கழகம் மற்றும் சில அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழவிடப்படவில்லை என அவ்வமைப்புகள் குற்றம் சுமத்தி, மேற்படி ஆட்சேபத்தை தெரிவித்தன.
போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையர்கள் மூவரும் ஏற்கெனவே சென்னையை அடைந்திருந்த நிலையில் அவர்களை பொள்ளாச்சிக்கு வரவேண்டாம் எனவும் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment