Sunday, July 22, 2012

மயிலிட்டியை நிரந்தரமாக அபகரிக்கிறது சிறிலங்கா இராணுவம் – கடற்றொழிலாளர்களை கோப்பாயில் குடியேற்ற நடவடிக்கை

church-Feast-Myliddyபலாலி இராணுவத் தளத்துக்கு வடக்கேயுள்ள மயிலிட்டிப் பிரதேசத்தை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரவுள்ள சிறிலங்கா அரசாங்கம், அங்கிருந்து இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்களை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் தகவலை சிறிலங்கா படைகளின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
“1990இல் இடம்பெயர்ந்த மயிலிட்டியை சேர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

மயிலிட்டியில் இருந்த இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்த பொருத்தமான அரச காணிகளை இனங்காணும் படி கோப்பாய் பிரதேசசெயலர் எம்.பிரதீபனிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
மயிலிட்டியில் இருந்து இடமபெயர்ந்த 1032 கடற்றொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 3257 பேர் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்குமாறு கோரி முன்னாள் யாழ். அரசஅதிபர் இமெல்டா சுகுமாரிடம் மனுவொன்றைக் கையளித்திருந்தனர்.
மயிலிட்டியில் இருந்த இடம்பெயர்ந்த – கடற்றொழிலை நம்பியுள்ள குடும்பங்களுக்கு, கடலுக்கு வெகு தொலைவில் உள்ள கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் குடியமர்த்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment