Saturday, July 07, 2012

சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது – ஜெயலலிதா

untitled91இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழர்களுக்கு எதிராக ஒருதலை பட்சமாக மத்திய அரசு செயல்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது ஏற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு தாம்பரம் அருகில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை தமிழகத்திலிருந்து பெங்களூருக்கும் மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது.
இந்நிலையில் இலங்கை விமானப்படை வீரர்களை பெங்களூருக்கு அருகிலுள்ள யலகங்க விமானப்படை பயிற்சி மையத்திற்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது என்றும், இது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கும் நிலையில் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது, தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்ப்படித்தியுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.
இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக  நடைபெற்ற இறுதிப் போரில் பல்வேறு அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தவர்களை போற்குற்றவாளியாக தண்டிக்க வேண்டி எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில், பெங்களூரில் இலங்கை விமானப்படையினருக்கு நடைபெற உள்ள இந்த பயிற்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
மேலும் இந்தியாவில்  இலங்கை இராணுவத்திற்கு எங்கும் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment