Wednesday, July 25, 2012

சிறிலங்கா வர்த்தக கண்காட்சிக்கு இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம்

சிறிலங்காவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 100இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில் பங்கேற்க இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளது.


இந்தியாவின் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்தக்குழுவுக்குத் தலைமையேற்று கொழும்பு வரவுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் 5வது பணக்காரரான சுனில் பாரதி மிட்டலும் சிறிலங்கா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 105 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment