சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்யும் போது, முறையான செயல்முறைகளை ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்புநாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள ரவிநாத் ஆரியசிங்க, தனது நியமன ஆவணத்தை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. பணியக பணிப்பாளர் நாயகம் காசிம்
ஜோமார்ட் டோகாயேவிடம் கையளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்பு நாடுகளும் முறையான செயல்முறைகளை பின்பற்றுவதுடன் அதன் குறிக்கோள் அலகுகளினால் வழிப்படுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளும், சில புலம்பெயர் தமிழ்க்குழுக்களும், சுயநலத்துடன் செயற்படும் சிலரும், தமது குறுகிய நோக்கங்களுக்காக ஐ.நாவைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது” என்றும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment