
ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங்கீகரிக்க கோரும் கையெழுத்து பதிவேட்டில் பெருந்திரனாக மக்கள் ஒப்பங்களை இட்டுக் கொண்டனர்.
அத்தோடு தமிழீழத் தேசிய அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான முற்பதிவுகளையும் மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்த மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் ஒளிபட விபரக்கோவைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த பல பிரென்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நகரபிதாக்கள், மாவட்ட சபை உறுப்பினர்கள் என, பிரென்சு சமூக அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஆர்வத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மையத்திற்கு வருகை தந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment