Wednesday, July 25, 2012

தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேசம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அக்கிரமங்களுக்கு சர்வதேச சமூகமே பொறுப்பேற்றக வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Top News உள்ளகரீதியான விசாரணை மூலம் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிரூபணமான சூழலிலும், கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் சிறீலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் ஊடாக சிறீலங்காவின் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேசம் சந்தர்ப்பம் அளித்தது. இந்த சூழலிலேயே, அரசியல் கைதியான நிமலரூபன் வவுனியா சிறைச்சாலைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே, இதற்கான பொறுப்பை சர்வதேசமே பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்ததுடன், இனியும் தாமதிக்காமல் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேசம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment