Thursday, July 26, 2012

ஒலிம்பிக் தொடக்கவிழாவுக்கு லண்டன் வருகிறார் சிறிலங்கா அதிபர் – எதிர்ப்பு பேரணிக்கு தமிழர்களும் தயார்

MR-london-2012லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்.  அவருக்கு எதிராக பாரியளவில் போராட்டம் நடத்த அங்குள்ள தமிழ் சமூகம் தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் லண்டன் வரத் திட்டமிட்டுள்ளார் என்பதை அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் ஆரம்பவிழாவில் பங்கேற்கக் கூடும்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடைசியாக எலிசபெத் மகாராணியின் வைர விழாவில் பங்கேற்க லண்டன் வந்திருந்த போது ஆயிரக்கணக்காக தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா அதிபர் மீண்டும் லண்டன் வந்தால் அவருக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடத்த வாய்ப்புக்கள் உள்ளதாக தம்முடன் தொடர்பு கொண்ட தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ‘தி இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் கூறியுள்ளது.
சிறிலங்காஅதிபர் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டது, குறிப்பாக ஒலிம்பிக் விழாவுக்கு அழைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமற்றது என்று இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் ஜான் ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக உலகத்தமிழர் பேரவையை சேர்ந்த சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment