Saturday, August 04, 2012

இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி

பெங்களூரில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்துவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று ஸ்ரீராம்சேனை தலைவர் முத்தாலிக் திட்டவட்டதாக தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம்சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்,


இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது என்றும், அதற்கு எதிராக ஆகஸ்டு முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கடந்த முறை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்து இருந்தேன். அந்த போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி. அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு முத்தாலிக் கூறினார்.

No comments:

Post a Comment