அன்று டோர்ட்முன்ட் நகரில் இவ்வாண்டுக்கான தமிழர் விளையாட்டு விழா
சிறப்பாக நடைபெற்றது. காலை 08:00 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில்,
பொதுச்சுடரை லெப்.கிர்மானியின் சகோதரன் றோய் அவர்களும், ஈகைச்சுடரை
இளஞ்சூரியன் இசைக்குழுவைச்சேர்ந்த ஹரிஷ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை மாநிலப்பொறுப்பாளர் மயூரன்
அவர்கள் ஏற்றிவைத்தார்.
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு,
மெய்வல்லுனர் போட்டிகள் மட்டும் சிறுவர்களுக்கான போட்டிகள் ஆகியனவும், மாலை
வேளையில் களிப்பூட்டும் விளையாட்டுக்களான முட்டி உடைத்தல்,தலையணைச்சண்டை,
சங்கீதக்கதிரை ஆகியனவும் நடைபெற்றன. மறுபுறத்தே தாயக மணம் கமழும்
உணவுப்பொருட்களும் தயார்செய்யப்பட்டிருந்தது.
மாலை 18:00 மணியளவில் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்று, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பட்டயம் வழங்கிக்கெளரவிக்கப்பட்டது.











































No comments:
Post a Comment