Friday, August 10, 2012

இந்திய பிரச்சினையையும் தீர்த்த இலங்கை ஜனாதிபதிக்கு விருது வழங்கவேண்டும்!- சுப்பிரமணிய சுவாமி

mahinda_swamyஇலங்கை மகிந்த ராஜபக்ச தமது நாட்டு பிரச்சினையை மட்டும் தீர்க்கவில்லை, இந்தியாவின் பிரச்சினையையும் தீர்த்து விட்டார், அதற்காக இந்தியா அவருக்கு உயர்ந்த விருது வழங்க வேண்டும் என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள அவர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி, 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி., இதன் மூலம், இலங்கையின் பிரச்சினையை மட்டும் இலங்கை ஜனாதிபதி தீர்க்கவில்லை, இந்தியாவினது பிரச்சினையையும் கூட அவர் தீர்த்து விட்டார் என்றும் அவருக்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக நேற்று முன்நாள் தொடங்கியுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ள சுப்பிரமணிய சுவாமி இன்று கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்  என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment