
நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்து வதற்கான 'நடவடிக்கைத் திட்டம்' அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய நகர்வாக ஐ.நா. குழு கொழும்பு வருவதற்கான அனுமதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட மூன்று விடயங்களையும் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்தக் குழுவினர் வழங்குவர்.
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்தக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை அரசு இதுவரை மறுத்து வந்தது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கும் அரசு எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்துமாறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துப் போகிறது என்பதை வெளிப்படுத்துமாறும் இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அலுவலகம் வழங்கும் ஆலோசனைகள் உதவிகளை இலங்கை அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஜெனிவா தீர்மானம் வலியுறுத்தி இருந்தது.
No comments:
Post a Comment