Monday, August 06, 2012

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள பௌத்த மக்கள் எவரும் வசிக்காத ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு காவல்றை படையினர் பலத்த பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த (03-08-2012) வெள்ளிக்கிழமை இரவு குறித்த பகுதியில் விஹாரை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மூதூர் பிரதேச மக்கள் எதிர்ப்பு தொரிவித்து வந்த நிலையில் மூதூர்க்கு விஜயம் செய்த சிறு கைத் தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஜபல் நகர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கோ விஹாரை அமைப்பதற்கோ அரசாங்கம் ஓருபோதும் அனுமதி வழங்கவில்லையென்றும் தொல்பொருள் சான்றாதாரங்களை பாதுகாப்பதற்கு மட்டுமே உரிய தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடக் கூறியிருந்தார் .

அமைச்சரின் இக்கூற்றை நம்பி பொது மக்கள் எதிர்ப்பைக் கைவிட்டிருந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment