Tuesday, August 21, 2012

இந்திய நிதி உதவியில் திருக்கேதீஸ்வர நிர்மாணப் பணி ஆரம்பம்

2b2923c3f300381632de02212a238a60திருக்கேதீஸ்வரம் சிவன் கோயிலின்  மகா மண்டபத்தையும் கருங்கல்லினால் அமைப்பதற்கான திருப்பணிக்கு 365 மில்லியன் இந்திய ரூபாவைவழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. அத்துடன் இதன் முதற்கட்ட வேலைகளையும் இந்திய கலாசார அமைச்சர் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
புத்த பெருமானின் புனித சின்னங்களை இலங்கைக்கு எடுத்து வந்துள்ள இந்திய கலாசார அமைச்சர் குமாரி ஸெல்ஜா மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரத்துக்கு நேற்று பயணம் செய்து அந்த ஆலயத்தின் மகா மண்டப திருப்பணி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
இதனை திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இந்த ஆலயத்தின் கருவறையும் ஏனைய முக்கிய இடங்களும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்ததாக மகா மண்டபமும் கருங்கல்லினார் அமையவுள்ளழம குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment