Tuesday, August 21, 2012

உரிமையை மீட்டெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள்; கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் கோரிக்கை

693c94d79d079baf5044700e9cf2fd7fதமிழரின் சுய நிர்ணய உரிமையை மீட்டெடுக்க தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் கென்றி மகேந்திரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழனின் தன்மானத்தை காக்க  அனைத்து தமிழ் மக்களும் முன்வர வேண்டும். கிழக்கு மாகணத்தைப் பொறுத்தவரையில் வரதராஜன் மற்றும் பிள்ளையான் போன்றவர்களின் ஆட்சி தமிழ் மக்களுக்கு ஒரு கண் துடைப்பாகவே காணப்பட்டது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடைய மூன்று வருட ஆட்சியும் அரசிற்கு சாதகமானதாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் கிழக்கு மாகண சபைத் தேர்தல், வடக்கு கிழக்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
இதற்கு கிழக்கு மாகாண மக்கள் முழு மூச்சுடன் செயற்பட வேண்டும். இதன் மூலம் இந்த அரசின் கபட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தை காட்டி அரசின் போலி நாடகத்தை முறியடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment