தீவிரவாதிகள்
மீண்டும் தமது தலைகளை நிமிர்த்திக் கொள்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால்,
சிறிலங்கா படைகளை பலப்படுத்திக் கொள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் நிதி
ஒதுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பிரதமரும் மூத்த
அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். “சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும் காவல்துறையும் நவீன ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும்.
நாம் அடைந்த அமைதியைச் சீர்குலைக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன.
நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இவற்றை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment