Monday, August 13, 2012

இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய அரசும் உடந்தை! டெசோ மாநாட்டில் விக்கிரமபாகு

wickramabakuஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை என்று விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள வை.எம.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய நடுவண் அரசுக்கு எதிராக  உண்மையை துணிந்து உரைத்த விக்கிரமபாகு கருணாரட்னவின் உரையானது அவர் பேசிக்கொண்டிருக்கும் போது இடை நடுவில் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment