சிறிலங்காவில்
எதிர்காலத்தில் தமிழர்கள் சமத்துவமாகவும், கௌரவமாகவும், நீதியுடனும்,
சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே, ஜெனிவா
தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்று இந்திய வெளிவிவகார இணை அமைச்சர்
பிரினீத் கௌர் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இதற்காகவே கடந்த மார்ச் 22ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிக்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது.
எனினும் அயல் நாடான சிறிலங்காவுடன் இந்தியா நெருக்கமான – நட்புறவுடன் கூடிய உறவைக் கொண்டுள்ளது.
இன்று சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே விளங்குகிறது.
சிறிலங்காவில் அதிகளவு நேரடி முதலீடு செய்துள்ள நாடாகவும் இந்தியாவே உள்ளது.
சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்றக் கூட்டுக்குழு, ஊரக அபிவிருத்தி அமைச்சர், வர்த்தக அமைச்சர் போன்ற உயர்மட்டப் பயணங்களின் மூலம் இந்த நெருக்கமான உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment