"தமிழ் - மறுக்கப்பட்ட அடையாளம்" எனும் மாநாடு சனிக்கிழமை 28 ஆடி Palazzo
delle Aquile - Sala delle Lapidi யில் தமிழ் இளையோர் அமைப்பினாலும்
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.
Palermo வில் உள்ள வெளிநாட்டவர்களில் தமிழர் தான் அதிகமாக உள்ளார்கள். 5000 க்கு மேல் இங்கு வாழ்கின்றார்கள், ஆனால் குறைவான எண்ணிக்கை இத்தாலி இன மக்களுக்கு தான் இவர்களுடைய சோக நிலவரம் தெரியும். இலங்கை தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவ்வினம் பல தசாப்தங்களாக சிங்கள மக்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும், மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட அமைப்புகள் பின்வருமாறு : Comune di Palermo - Human Rights Youth Organisation - Amnesty International - Sportello antirazzista Cobas - Forum antirazzista Palermo - Zetalab - Giuristi Democratici - CISS - Associazione Efata - ASGI - COBAS - S.O.S. Razzismo Sicilia - Giovani Comunisti Palermo - Officina Creativa Interculturale - UNIS - S.E.L. - Arca - Giornale del Mediterraneo - CGIL.
Sicilia மாகாண இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் Stefano Edward தமிழ் மக்கள் இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை செய்து வருகின்ற திட்டங்களை விவரித்தார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனை உருவாகின ஆரம்பத்தில் இருந்து தற்போதைய மனித உரிமை மீறல்கள் பற்றியும் எடுத்து உரைக்கப்பட்டது.
Sicilia மாகாண இணைப்பாளர் Stefano Edward அவர்கள் இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்களவை செய்து வருகின்ற வேலைத்திடங்களை விபரித்து எடுத்துரைத்தார். அத்தோடு தமிழர்களின் வரலாற்று ரீதியான தகவல்கள் உட்பட இன்றுவரை சிங்களத்தால் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட மனிதவுரிமை மீறல், மானிடத்திற்கு எதிரான வன்முறை மற்றும் இனவழிப்பு விடயமாக ஆழமாக எடுத்து கூறப்பட்டது.
Palermo பல்கலைக்கழக பேராசிரியர் Giuseppe Burgio அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் போராடி அமைக்கப்பட்ட தமிழீழ நிழல் அரசாங்கம் மற்றும் அவர்களுக்கு இருந்த மக்களின் பேராதரவு தொடர்பாகவும் விளக்கினார். Giuseppe Burgio அவர்கள் எமது மனித நேய பணியாளர்களின் வழக்கில் நீதவானின் வேண்டுகோளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஓர் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்து இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் Fulvio Vassallo தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உள்ள தடை தொடர்பாகவும், அதனின் பாதிப்பு தொடர்பாகவும் உரைத்தார். மேலும் உடனடியாக இலங்கை அரசாங்கம் நடாத்திய இனவழிப்பு மற்றும் போர் குற்றம் மீது சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென எடுத்துரைத்தார். மனித உரிமை பேராசிரியரான Clelia Bartoli போர் குற்றம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை இவற்றின் விளக்கத்தைத் வலியுறுத்தி தமிழர்களுக்கு நிகழ்ந்தது திட்டமிட்ட இனப்படுகொலை தான் எனக் கூறினார்.
மேலும் ஊடகங்களின் மௌனமும் அரச கட்டமைப்புகளின் பலவீனமும் இவ் இனவழிப்புக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். இம் மௌனத்தின் காரணம் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற வல்லரசுகளின் பொருளாதார நோக்கத்திற்கே ஆகும். தனது மௌனத்தால் இவ் இனப்படுகொலைக்கு உறுதுணையாக நின்றமைக்கு, தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுத்து ஓர் தீர்வினை எடுப்பது சர்வதேசத்தின் தார்மிக கடமையாகும் என இறுதியாக தெரிவித்து இருந்தார்.
தமிழ் மக்கள் தரப்பில் மட்டும் அல்லாமல் இத்தாலிய அறிஞர்கள் போன்றவர்கள் தரப்பில் இருந்தும் தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பு சம்மந்தமாக தகவல்கள் வந்தமையால் தம்மால் இதற்கு முயன்றதை முன்னெடுப்பார்கள் என கல்விக்கான மாநகர அமைச்சர் Barbara Evola கூறி இருந்தார். அவர்கட்கு இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை சார்பாக ஓர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இறுதியில் மக்கள் வளர்ச்சி ஆய்வாளர் Fabio Pettirino அவர்கள் அமைப்புனளுக்கிடையே செய்யக்க கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக உரையாற்றினார். அரசாங்க மத்தியில் இவ்விடயத்தை எப்படி கொண்டு செல்வது மற்றும் எமது வேலைத்திட்டங்களுக்கு அரசாங்க உதவி மற்றும் ஆதரவு பெறுவது தொடர்பாகவும் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து விவாதம் இடம்பெற்றது இதில் CISS அமைப்பின் Sergio Cipolla மற்றும் Amnesty International அமைப்பின் ஆசிரியர் Provenza அவர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். மாநாட்டில் பங்குபெற்றிய அனைவரும் "தனித் தமிழீழமே" தமிழ் மக்களின் ஒரே தீர்வென்ற பிரகடனத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனில் கையொப்பம் இட்டார்கள்.
நன்றி
இத்தாலி தமிழ் இளையோர்அமைப்பு
- giovanitamil@gmail.com
இத்தாலி ஈழத் தமிழர் மக்களவை -
consigliodeitamil@gmail.com

No comments:
Post a Comment