Thursday, August 02, 2012

Göttingen நகரில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு

1983 யூலை 23 தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்து துடித்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும் மற்றும் தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடுக்கும் இனவழிப்பை உள்ளடக்கியும் யேர்மன் Göttingen  நகரில் தமிழ் இளையோர்களால்  கவனயீர்ப்பு நடைபெற்றது .





அங்கு இளையோர்கள் யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் வழங்கி யேர்மன் மக்களை விழிப்படைய வைத்தார்கள் .நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில்  கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில்  கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 "  நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் .










கடந்த வாரங்களாக 10 நகரங்களுக்கும் மேலாக யேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் ஒழுங்கு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment