அடுத்த
மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள ‘சாட்சி
பாதுகாப்பு’ சட்டமூலத்தை தயாரிக்கும் வேலைகளை அரசாங்கம்
துரிதப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள், தராதரங்களுக்கு அமைய இலங்கையில் இவ்வாறான சட்டத்தை கொண்டுவரும்படி சர்வதேச நிறுவனங்கள் இலங்கையிடம் கேட்டிருந்தன. இந்த சட்டமூலத்தை சட்டவரைஞர் திணைக்களம் தயாரித்து வருகிறது என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார். சட்டமா அதிபர் இதை அங்கீகரித்ததும் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அவர் கூறினார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் இச்சட்டமூலம் குறித்து தெரிவித்திருந்தார்.
இந்த சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென நீதியமைச்சருக்கு சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் எழுதிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment