இலங்கையில்
இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த
வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று
அதிகாரி ஆனந்த பத்மநாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவை தளமாக கொண்டு ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க் குற்ற மீறல்கள் தொடர்பில் நியாயங்களை தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே ஒரே வழி
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பை அது கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் பிரச்சினை சர்வதேச கண்ணுக்கு மீண்டும் வெளிப்படும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக பல உறுதிமொழிகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கம் கடந்த ஜூலையில் வெளியிட்ட குழுவின் இறுதி அறிக்கையிலும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழக மக்கள், இலங்கை தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் சாசனப்படி இலங்கை தமிழர்களின் அகதி நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று ஆனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment