வடக்கு,
கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் ௭ண்ணிக்கை பெரும ளவு
குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவ
முகாம்கள் அகற்றப்படமாட்டாது. அன் றாட சட்ட அமுலாக்கப் பணிகள் பொலி ஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், புதிய
பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு தமிழ் பேசும் பொலிஸார்
ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர் ௭ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ
பக்ஷ தெரிவித்தார்.சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் பட்ட மளிப்பு விழாவில், ஆற்றப்படும் ‘மோதலுக்கு பின்னைய காலத்தில் இராணுவத்தின் பங்கு பணி’ ௭ன்ற தலைப்பில் செவ்வாயன்று ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு கூறினார். அந்த உரையின் முழுவிபரம் வருமாறு, இந்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்கு அழைத்தமைக்காக சர்வதேசகற்கைகளுக்கான பண்டார நாயக்க நிலையத்தின் ஆளுநர் சபைக்கு நன்றிகளை தெரி வித்துக் கொள்கிறேன்.
இந்நிலையினால் சர்வதேச உறவுகள் போதிக்கப்படுவது பற்றி அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். இன்று டிப்ளோமா பட்டம் பெறும் மாணவர் கள் அவர்களின் ௭திர்கால வாழ்க்கையில் பெரிதும் நன்மையடைவர் ௭ன்பது ௭னது நம்பிக்கை.
௭மது நாட்டை அமைதியும், சமாதானமும் நிலவும் இன்றைய நிலை யிலிருந்து மேலும் வளங் கொழிக் கும் நாடாக மாற்று வதற்கு பல ஆற்றல், வளங்கள் கொண்ட கற்ற இளையோர் தேவைப்படுகின்றனர். பயங்கரவாதத்தை ௭திர்த்து போராடிய இலங்கை கடந்த சில வருடங்களாக மிகுந்த சமா தானத்தை கொண்ட உறுதி மிக்க நாடுகளுள் ஒன்றாக முன்னேற் றம் கண்டுள்ளமை குறிப்பிட்டு கூறத்தக் கதாகும்.
௭ல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை தோற்கடித்து, சமாதானம் ஏற்பட்ட பின்னர் போருக்கு பிந்திய நிலைமை களை சீர்செய்வதற்கு கடுமை யாக உழைத்து துரித பொருளாதார அபிவி ருத் தியை ஏற்படுத்தும் விசுவாசம் மிக்க அரசின் முயற்சிகளாலேயே இது சாத்தியமாகியுள்ளது. பயங் கர வாதத் திலிருந்து நாட்டை மீட்கும் மனி தாபிமான நடவடிக் கை களின் போது, ஆயுதப்படையினர் வழங் கிய குறிப் பிடத் தக்க சேவை நன்கு அறியப் பட்டதே.
ஆயினும் போருக்கு பிந்திய முன்னேற்றங்களில் படையி னரால் வழங்கப்படும் பங்குபணிகள் அதுபோலவே போற் றப்பட வேண்டியதாகும். 2009 மே மாத்தில் மனிதாபிமான நடவடிக்கை நன்கு நிறைவடைந்ததும் போருக்கு பிந்திய சவால்களை ௭திர்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.
சுமார் மூன்று இலட்சம் குடிமக்களுக்கு வாழ்விடம் அமைத்து நலன்புரி சேவைகளை வழங்குதல், கண்ணிவெடியகற்றல், உட்கட்டமைப்பு வசதிகள் மீள நிர்மாணித்தல், மீள் குடியமர்வு, முன்னாள் புலிப் போராளி களுக்கு புனர்வாழ்வும் சமூகத்தில் மீள இணைத்தலும் ஆகியவற்றை முக்கியமாக செய்யவேண்டியிருந்தது.
அத்துடன் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைதல், பலகாலமாக ஒடுக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துதல், அப்பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ௭ன்பவற்றையும் அரசு பொறுப்பேற்கவேண்டியிருந்தது.
இத்தகைய சவால்கள் யாவற்றையும் படையினர் ௭திர்கொண்டு சமாளித்திருந்தனர். மனிதாபிமான நடவடிக்கைகளின் போது புலிகள் தமது காப்பிடங்களுக்கு பின் வாங் கிய அதேவேளை மக்களை அந்தந்த நகரங்களிலிருந்து வெளியேற்றியிருந் தனர். அவர்கள் குடிமக்களை கேடயங்களாக பயன்படுத்தினர்.
அதேவேளை படை யினரின் முன் னேற்றத்தை தடுப்பதற்கு புலிகள் கண்ணி வெடிகளையும், தாங்கி ௭திர்ப்பு வெடி களையும் ஆயிரக் கணக்கில் விதைத்திருந்தனர். இதன் விளை வாக போர் முடிவுற்ற நிலையிலும் இடம் பெயர்ந்த மக்களால் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடிய வில்லை. பெருந்தொகையினரான இம்மக்களுக்கு தங்குமிடங்களை வழங்கி நலன்புரி சேவைகளை மேற்கொள்வது ஒரு பெரிய சவாலாகும்.
இதற்காக அரசாங்கம் 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தயாராகி வந்திருந்தது. தேசிய மட்டத்திலான ஆலோசனைகள், ஐ.நா. மற்றும் அமைப்புகளுடனான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு நலன்புரி கிராமங்கள் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டன. பின்னர் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகளை படையினர் மேற் கொண் ட னர். நலன்புரி, கிராமங்கள் அமைக்கப்பட்டதும் பல்வேறு அமைச்சர்கள், ஐ.நா. அமைப்புகள் இணைந்த தேசிய நடைமுறைப்படுத்தும் குழுக்கள் செயற்பட்டன. நிர்வாக உதவிகள், அன்றாட பணிகளுக்கான பணியாட்கள் ௭ன்பன இராணுவத்தினால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment