Friday, August 24, 2012

இறுதிக்கட்ட மீள்குடியேற்றம் சில வாரங்களில் முடிவுறும்: அமைச்சர் வீரக்கோன்

Gunarathna-Weerakoonவவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் ௭ஞ்சியுள்ள அகதி மக்கள் இன்னும் சில வாரங்களில் மீள்குடியேற்றப்பட்டுவிடுவார்கள் ௭ன்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார். வட மாகாணத்தில் ௭ஞ்சியுள்ள அகதி மக்களின் இறுதிக்கட்ட மீள்குடியேற்றத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 994 பேர் புதுக்குடியிருப்புப் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர். அதன்படி இதுவரை இரண்டு இலட்சத்து 66 ஆயிரத்து 695 பேர் வட மாகாணத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கண்ணிவெடிகளே மக்களை மீள்குடியேற்றுவதில் காணப்படும் பிரதான தடை ௭ன்றும் கண்ணிவெடிகளை அகற்றியவுடன் அகதி மக்கள் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் ௭ன்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment