Tuesday, August 21, 2012

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட சிறீலங்காவின் முக்கிய இராணுவத்தளபதி மரணம்.

news_21-08-2012_9420120820_04p1தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இனஅழிப்புப் போரில் பிரதான பங்காற்றிய இராணுவத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக்க புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.
இவர் மரணமாகும் போது சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்கப் படைப்பிரிவின் தளபதியாக இருந்து வந்தார். 54 வயதான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணமானார்.

34 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியுள்ள அவர்இ இந்தியாஇ அமெரிக்காஇ பிரித்தானியாஇசிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றவர்.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிழக்கிலும்இ வடக்கிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அவர்இ வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் பங்கேற்றவர். போர் முடிவுக்கு வந்த பின்னர்இ சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றிலும் இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலகவின் இறுதிச்சடங்கு நேற்று கண்டியில் நடைபெற்றதாக  சிறீலங்கா செய்திகள் தெரிவிக்கிக்ளறன
கோத்தபாய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமாவரான இவர், வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலைசெய்யப்படுவதற்கு காரணகர்த்தாவாக விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment