Thursday, August 23, 2012

நவிபிள்ளையின் பயண ஏற்பாடுகளை கவனிக்க சிறிலங்கா வருகிறார் தொழில்நுட்ப அதிகாரி

navi-pillaiஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் விரைவில் சிறிலங்கா வரவுள்ளார்.
இந்தத் தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
“ஐ.நா அதிகாரி தனது பணியை மேற்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாம் செய்து கொடுப்போம்.

அவர் எங்கு செல்ல விரும்பினாலும் செல்லலாம். நிலைமைகளைக் கண்டறியலாம்.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இங்கு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே அழைத்தது.
ஆனால் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே வருவதாக கூறியிருந்தார்.
அவர் தற்போது இங்கு வர விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment