Monday, August 13, 2012

ஆயுதமேந்தி விடுதலைப்புலிகள் போராடியதில் நியாயமுள்ளது; ராம்விலாஸ் பஸ்வான்

87241aca31e92e9cc29dda4f90190422இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதில் நியாயமுள்ளது. அமைதி வழியில் போராடி பலனளிக்காது போகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்சினை தீர தமிழீழமே தீர்வு எனவும் அதனைப் பெற இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் உரைத்துள்ளார்.
நேற்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
இலங்கையில் தமிழீழம் என்ற தனி நாடு கேட்டு நடக்கும் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களே என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழ் மக்கள்தான். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
எந்தத் தமிழரும் அங்கு அந்நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியவில்லை. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஐ.நா. அறிக்கையே கூறியது.
இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை அது தமிழ்நாட்டுக்குள்தான் தெரிகிறதே தவிர, தமிழகத்தை தாண்டி இந்தியாவின் இதர மாநில மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. இலங்கை தமிழர் என்றாலே அவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அமைதியான வழியில் போராடி அதனால் பயன் கிடைக்காமல் போகவே, விடுதலைப்புலிகள் கையில் ஆயுதங்களை எடுக்கவேண்டி இருந்தது என்ற உண்மை தமிழகத்தை தவிர மற்ற மாநில மக்களுக்கு தெரியவதில்லை.
இதுபோன்ற மாநாடுகளை வட மாநிலங்களில் நடத்த வேண்டும். அப்போதுதான் அங்குள்ள மக்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தெரியவரும்.
இந்த நேரத்திலே மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினை தீர தமிழீழம்தான் ஒரே தீர்வு’’ என்றார்.

No comments:

Post a Comment