Wednesday, August 01, 2012

தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை..இந்திய அரசு அரவணைத்துதான் போகிறது: - ராஜபக்ச.

இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.. ஏனெனில்மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதாவது:

எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் நட்பு அடிப்படையில் செயற்பட்டு
வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் எமக்கு எதிராக பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாம் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை என்றார் மகிந்த ராஜபக்சே,.

No comments:

Post a Comment