இனப்படுகொலை புரிந்துவரும் சிறிலங்காவினை பிரதிநித்துவப்படுத்தும் அதன்
விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க
வேண்டாம் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 ஆம்
திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி இன்று
பத்தாவது நாளாகத் தனது போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்.
இன்றைய தினம் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட ஏ.எப்.பி செய்திச் சேவையினர் திரு. சிவந்தனை பேட்டி கண்டதுடன் அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். லண்டனிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையான ஈவ்னிங் ஸ்ரான்டர்ட் அதன் இன்றைய பதிப்பில் திரு. சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தது.
உண்ணாநிலைப்போராட்டம் நடைபெறும் ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையப்பகுதிக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக இலவச போக்குவரத்து வசதிகளை சில தமிழ் வாடகை வாகனச்சாரதிகள் செய்து வருகிறார்கள்.
இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தினை பார்வையிடச் செல்பவர்கள் பலரும் இவ்விடத்தை கடந்து செல்வதனால், சிறிலங்காவின் இனவழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை தமிழ் இளையவர்கள் விநியோகித்து வருகின்றனர். அவர்கள் இன்று ஆயிரத்து ஐநூறு துண்டுப்பிரசுரங்கள் வரை விநியோகித்ததாகத் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment