கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்கா இலங்கை அரசைக் கோரியுள்ளது.
தேசிய செயற்திட்டம் நாட்டின் சகல இன மக்களுக்கும் நன்மை பயப்பதாக
அமையும் என்பதுடன் நாட்டின் நீண்ட கால நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை
ஏற்படுத்த உதவுவதாக அமையும் எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம்
வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தேசிய செயற்திட்டத்தை அமெரிக்கா வரவேற்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு
அளவில் நடைமுறைப்படுத்துவதை நாம் ஊக்குவிப்போம். தேசிய செயற் திட்டம் முழு
அளவில்
நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம்
இலங்கை மக்கள் அனைவரும் நன்மை அடைவதுடன் நாட்டில் நல்லிணக்கம் மற்றும்
சமாதானத்தை எட்டுதல் என்பவற்றுக்கும் அது உதவியாக அமையும் என அமெரிக்கத்
தூதரகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. அரசின் தேசிய செயற் திட்டத்துக்கு
அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சர்வதேச ரீதியிலான மனிதாபிமான செயற்பாடுகள், மனித உரிமைகள், நிலங்கள்
மீளளிப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுடன் நல்லிணக்கத்தையும்
உள்ளடக்கியதாக தேசிய செயற்திட்டம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment