Thursday, August 16, 2012

நவநீதம்பிள்ளையின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது! விமல் வீரவன்ச

navaneethampillay04இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு ஐ.நாவில் நடுநிலை வகித்த நாடுகளை நவநீதம்பிள்ளை நியமித்திருக்கலாம். அதைவிடுத்து  ஆதரவளித்த இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது. என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் தொடர்பிலும் ௭மது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதாவது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் நியாயமாக இருக்கவேண்டும். இதனை நாம் வலியுறுத்திவருகின்றோம்.
நவநீதம்பிள்ளை தற்போது இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை இலங்கையின் மனித உரிமைகளை மதிப்பீடு செய்ய நியமித்துள்ளார். அவ்வாறான நவநீதம்பிள்ளையின் நியமனத்தை இலங்கை நிராகரிக்கின்றது.
௭வ்வாறெனினும் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு ௭திராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு சில நாடுகள் ஆதரவாகவும் சில நாடுகள் ௭திராகவும் வாக்களித்திருந்தன. மேலும் சில நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
இந்நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கென இலங்கைக்கு ௭திரான அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் நடுநிலை வகித்த நாடுகளை நவநீதம்பிள்ளை நியமித்திருந்தால் அது ஓரளவு நியாயமானதாக இருந்திருக்கும். நாட்டு மக்களும் அது தொடர்பில் நியாயமாக சிந்தித்திருப்பர்.
ஆனால் குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளை இதற்கு நியமித்தமையினால் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட முழு ஐ.நா. செயற்பாடு மீதான ௭மது சந்தேகம் வலுவடைகின்றது.
அத்துடன் அவர்கள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கின்றனர் ௭ன்பதும் தெளிவாகின்றது. உலக நாடுகளின் அமைப்பானது உலக நாடுகளின் நம்பகத்தன்மைக்கு ஏற்ப செயற்படவேண்டும்.
எனவே ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச மட்டத்தினால் இலங்கைக்கு ௭திராக முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தோற்கடிக்க மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் சிறந்த களமாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment