Tuesday, August 07, 2012

இராணுவச் சிப்பாய்களின் பாலியல் வீரம்!

TH_LANKA2_1087908fரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணொருவரை இரு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமொன்று நேற்று முன்தினம் (05) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் பயணம் செய்த பெண்ணை பலவந்தமாக மலசல கூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் ஹபுத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை புகையிரத மலசல கூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்துமளவுக்கு இராணுவத்தினரது நடத்தை ராஜபக்ஷ ஆட்சியில் காணப்படுகின்றமை அருவருக்கத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment