
'சிறிலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் சிறிலங்காவின் வடகிழக்கு கடலில் தரித்து நிற்கின்றன.
சீன மீனவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்' என்று சீனப் படகில் இருந்து கைத்தொலைபேசி மூலம் அதன் கப்டன் வாங் வேய்சூ தெரிவித்துள்ளார்.
தாம் நன்றாக நடத்தப்படுவதாகவும் படகில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள சீன தூதரக இராஜதந்திரிகள் தற்போது திருகோணமலைக்கு விரைந்துள்ளனர்.
அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் இரண்டும் சிறிலங்காவுக்குச் சொந்தமானது என்றும் சீனர்கள் அதில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிகாரிகளும் சீன இராஜதந்திரிகளும் நிலைமைகள் குறித்து பேசியுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தால் அவர்களை சிறிலங்கா கடற்படை துன்புறுத்தியும் தாக்கியும் வருகிறது.
அதேவேளை கைதுசெய்யப்பட்டாலும் சீனர்களை அவர்களின் படகில் இருந்து கூட இறக்காமல் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment