Thursday, August 09, 2012

இந்தியாவிற்கு முற்றுப்புள்ளி, சீனாவிடம் இருந்து பேரூந்து இறக்குமதி.

இந்தியாவிடமிருந்து பேரூந்துகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சீனாவிடம் பேரூந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.சீனாவின் மோட்டார் வாகன தொழில்நுட்பமானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எனவே முதல்முறையாக சீனப் பேரூந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும்.

இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இலங்கையின் பேரூந்து சந்தையில் இந்தியாவின் அசோக் லேலன்ட் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.இவ் நிறுவனம் பேரூந்துகளை கடனுக்கு வழங்குவதில்லை. ஆனால் சீன நிறுவனம் கடனுக்கு பேரூந்துகளை வழங்கத் தயாராக உள்ளது.

 எப்போதும் ஒரே பேரூந்து உற்பத்தி நிறுவனத்தைச் சார்ந்து இருப்பதால் எந்த விதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை. விரைவில் கொழும்பு நகரில் இரண்டு இரட்டை அடுக்குப் பேரூந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம் இத்திட்டம் வெற்றி பெற்றால்  மேலும் பல பேரூந்துகள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment