
சிறிலங்கா அரசுக்கு தலைவலியாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களை தடுக்கும், திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் முகவரிகள் உருவாக்கப்படும்.
பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களில் நுழைய முற்படும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் அவை கொண்டு செல்லும். சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.
இதற்கென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது.இந்த தொழில்நுட்பவியலாளர்கள் போலியான யுஆர்எல் முகவரிகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
No comments:
Post a Comment