Saturday, September 08, 2012

செப்தெம்பர் 08 சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் கணக்குத் தீர்க்கும் நாள்

thangaveluஇந்த நாள் சிங்கள – பவுத்த பேரினவாதிகளோடு தென் தமிழீழ மக்கள் கணக்குத் தீர்க்கும் நாள்! தமிழ் மக்களுக்கு சுண்ணாம்பும்  சிங்களவர்களுக்கு வெண்ணெய்யும் கொடுக்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு தென் தமிழீழ மக்கள் சங்கு ஊதும் நாள்!
முள்ளிவாய்க்காலில் குண்டு போட்டு 40,000 தமிழ் ஆண், பெண், குழந்தைகள் எனக் கொன்று குவித்த படுகொலைக்குப் பழி தீர்த்துக் கொள்ளும் நாள்!

மாவீரர்களது துயிலும் இல்லங்களை இடித்துத் தள்ளி அதில் இராணுவ முகாம்கள் கட்டிய காட்டுமிராண்டிகளுக்கு பாடம் புகட்டும் நாள்!
போர் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் மூன்றரை இலட்சம் தமிழ்மக்களை அவர்களது சொந்த வீடுவாசல்களில் குடியமர்த்தாது தறப்பாள் கொட்டில்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுக்களாய், பிச்சைக்காரர்களாய்  நடத்தும்  உலகத்திலே  பிச்சைக்காரர்களாக ஆக்கியிருக்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு தண்டனை  அளிக்கும் நாள்.
இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவோ இடிந்த வீடுகளைத் திருத்திக் கொடுக்கவோ வக்கில்லாத சிங்கள அரசு தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் “சிங்கள போர் வீரர்களுக்கு” 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் இனவாத அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும்  நாள்!
தமிழர்களது காணி பூமிகளையும் வீடு வாசல்களையும்  அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரித்து வைத்திருக்கும் இரக்கமற்ற அரசுக்கு  கசையடி வழங்கும் நாள்!
தமிழர்களது தாயக பூமியில்  இராணுவ தளங்கள், கடற்படைத் தளங்கள், குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், அய்ந்து நட்சத்திர விடுதிகள் போன்றவற்றைக் கட்டிக் கொண்டிருக்கும்  இனவாத அரசுக்கு  பட்டை நாமம் போடும்பாடம் படிப்பிக்கும் நாள்!
சிங்கள தேசிய கீதத்தை தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கும் திமிர்பிடித்த சிங்கள இனவாதிகளுக்கு பட்டை நாமம் போடும் நாள்!
தமிழர்களது மரபுவழி நிலத்தில் கங்கு கரையின்றிச் சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களைச் சிறுபான்மையாக்கும் சதியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள இனவாத அரசின் முகத்தில் கரி பூசும் நாள்!
பவுத்தர்கள் வாழாத இடங்களில் பவுத்த விகாரைகள்,  பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவி தமிழர்களது பண்பாட்டைச் சிதைக்கும் சிங்கள அரசுக்குத் தக்க  பாடம் படிப்பிக்கும் நாள்!
வடக்கு கிழக்கில் சிவில் நிருவாகத்தை முடக்கி விட்டு ஓய்வு பெற்ற  இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகளை ஆளுநர்களாகவும் அரசாங்க அதிபர்களாகவும் செயலாளர்களாவும் நியமித்து கொலனி ஆட்சி நடத்தும் மகிந்த இராசபக்சேக்கு உறைப்பான முறையில் பதில் இறுக்கும் நாள்!
அய்நூறு காவல்துறையினரைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படும் கருணாவுக்கு அமைச்சர் பதவி,   வி.புலிகளுக்குக் குடிப்பதற்குத் தேநீர் கொடுத்தவர்களை  ஆண்டுக் கணக்கில் சிறையில் பூட்டி சித்திரவதை செய்யும் கொடிய ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள்!
காணி அதிகாரம் வேண்டாம், காவல்துறை அதிகாரம் வேண்டாம் என்று சொன்ன எட்ப்பர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொன்னான நாள்! புனிதமான நாள்!
போரின் முடிவில் இராணுவத்திடம் சரண் அடைந்த  வி. புலித் தளபதிகளை ஈவு இரக்கமின்றிச் சித்திரவதை செய்து சுட்டுத்தள்ளிய பாதகர்களுக்குக் கிழக்கில் பாடை கட்டும் நாள்!
வடக்கு கிழக்கை இராணுவமயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல் செய்யும் கொடிய அரசுக்கு கிழக்கில் இறுதிக் கடன் செய்யும் நாள்!
வித்தாகிப்போன எங்கள் வீரமறவர்களின் கனவு மெய்ப்பட, கிடைக்கின்ற ஒவ்வொரு துரும்பையும் ஆயுதமாக்குவோம்.
எமது பலம் வாக்குப் பலம் ஒன்றே!  அதனைப் பயன்படுத்தி ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியைத் தோற்கடியுங்கள்!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்!
நக்கீரன்

No comments:

Post a Comment