Saturday, September 08, 2012

தமிழத்தைச் சேர்ந்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் இரு நாடுகளின் உறவுகளை பாதிக்காது: ஜனாதிபதி

president_makintha_001தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் இரு நாடுகளின் நட்புறவை பாதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழக மாநிலத்தின் மிகச் சொற்பளவிலானவர்கள் நடத்தும் போராட்டங்களினால், இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தியா, இலங்கை தொடர்பில் சரியான புரிந்துணர்வுடன் செயற்படும் ஒர் நாடாகும்.
பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்ற அமர்வுகளை சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். சர்வதேச
சமூகத்திற்கு நல்ல செய்திகளைச் சொல்ல இந்த அமர்வுகள் வழிகோலும்.
நாடு தொடர்பான உணர்வினை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகள் கருத்து வெளியிடும் போது நாட்டின் நன்மதிப்பை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
அரசியல் நோக்கங்களைக் கருத்திற் கொண்டு நாட்டுக்கு அபகீர்த்;தி ஏற்படும் வகையிலான கருத்துக்களை வெளியிடக் கூடாது என ஜனாதிபி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment