ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012
நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான
தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது
அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.
கடந்த 18.05.2009ன் பின் ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்ட ஓர் மாபெரும் மீளெழுச்சியாகவும் பேரெழுச்சியாகவும் இப் பொங்குதமிழ் நிகழ்வு அமைந்திருந்ததாகவும் எமது விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்விற்கு மக்கள் தாம் தயாராகி விட்டதை சர்வதேச உலகிற்கு இடித்துரைத்திருக்கிறார்கள் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் கூறினர்.

No comments:
Post a Comment