Thursday, September 06, 2012

இலங்கை ராணுவத்தினர் 450 பேருக்கு இந்தியாவில் பயிற்சி: ஏ.கே.அந்தோனி

antonyஇலங்கை ராணுவ வீரர்கள் 450-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஏ.கே.அந்தோனி புதன்கிழமை அளித்த பதில் வருமாறு:இந்திய-இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்படி, இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேருக்கு தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி
அளிக்கப்படுகிறது. தவிர, 450-க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூர், கண்ணூர், பெல்காம் நகரங்களில் உள்ள ராணுவ மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment