இந்தியாவுக்குத்
தனிப்பட்ட பயணமாக, வரும் 20ம் நாள் வரவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த
ராஜபக்சவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுவதற்கு
வாய்ப்புகள் உள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரைச் சந்திக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விருப்பம் கொண்டுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், வரும் 21ம் நாள் நடைபெறவுள்ள பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா வரவுள்ளார்.
இது ஒரு தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். )
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 20ம் நாள் புதுடெல்லி செல்வதை சிறிலங்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் ஏனைய விபரங்களை அவர்கள் வெளிப்படுத்த மறுத்து விட்டனர்.
எனினும், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு சாத்தியம் உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் ரைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment