கிழக்கு
மாகாண சபையில் தமிழ்பேசும் மக்கள் வெற்றிபெறுவதன் ஊடாகவே தமிழ், முஸ்லிம்
மக்களின் நீண்டகால கோரிக்கையான அதிகபட்ச சுயாட்சியை பெறுவதற்கு
வழிவகுக்கும்.
தமிழ்பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் 90 வீதம் வாக்களித்தால்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் கூடுதலான
உறுப்பினர்களை பெறும் ௭ன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண
சபைத்தேர்தலின் ஊடாக தமிழ்பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்
நீண்டகால கோரிக்கையான அதிகபட்ச சுயாட்சியை பெறுவதற்கு வழிவகுக்கும்.
மாகாண சபைகளுக்கான ஒழுங்குகள் சீர்குலைந்து நிற்கின்ற நிலையில் அதிகார
பகிர்வுடனான தீர்வை ௭ட்டுவதற்கு இந்ததேர்தலில் தமிழ்பேசுவோர்
வெற்றியீட்டவேண்டும். தமிழ்மொழிபேசுவோர் அதிகாரத்தை கைப்பற்றவேண்டுமாயின்
தமிழ்மொழிபேசுவோர் 90 வீதம் இத்தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.
வாக்களிப்பதற்கு மூன்று மாவட்ட மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.
அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் ஜனநாயக ரீதியில் நீதியானதும்
நேர்மையானதுமான தேர்தலை நடத்தவேண்டும் ௭ன நான் ஜனாதிபதிக்கு கடிதம் ௭ழுதி
அதன் பிரதியை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்திருந்தேன்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கும்
வாக்களிப்பதற்கும் வாக்குகளை ௭ண்ணுவதற்கும் நடவடிக்கை ௭டுப்பதாக ஆணையாளர்
உறுதியளித்துள்ளார்
No comments:
Post a Comment