இலங்கை
யாத்திரிகர்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு
இந்திய மத்திய அரசு கொண்டுசென்றுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்நாட்டில் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கை யாத்திரிகர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தினால் விசேட விமானம் அழைத்து வரப்பட்டதுடன் அதற்குமுன்னர் இலங்கையிலிருந்து சென்ற இரு கால்பந்தாட்ட அணிகள் தமிழக அரசினால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாத்திரிகள் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னரும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்திய மத்திய அரசாங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
இந்நிலையில் இவ்விடயத்தை தமிழ்நாடு அரசாங்கத்தின் கவனத்துக்கு இந்திய மத்திய கொண்டு சென்றுள்ளதாகவும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ரீதியான விடயம் இதுவெனவும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்களினால் கையளிக்கப்பட்ட மூன்று மகஜர்களை புதுடில்லிக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் அனுப்பியுள்ளது
No comments:
Post a Comment