முன்னேஸ்வரம்
பத்திரகாளி அம்மன் கோவிலில் இவ் ஆண்டின் எந்தவொரு காலப் பகுதியிலும் பலி
பூஜை இடம்பெற மாட்டாது என கோவிலின் பிரதம குரு காளிமுத்து சிவபாதசுந்தரம்
தெரிவித்துள்ளார்.சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடா வருடம் இடம் பெற்றுவரும் மிருக பலி பூஜை கடந்த வருடம் மேர்வின் சில்வாவும் அவரது பரிவாரத்தினரின் அடாவடியினால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பலி பூஜை நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்தது இன்நிலையில் பலி பூஜையை தடுத்து நிறுத்த தலையீடுகளை
மேற்கொள்ளுமாறு, ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
இவ் வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் பலி பூஜையினை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தமக்கு கிடையாது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment