Thursday, September 06, 2012

“தமிழக மீனவர்கள் யாரும் ‘மீன் பிடித்து’ இலங்கை சிறையில் இல்லை” -கிருஷ்ணா

“இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்த காரணத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாருமே, தற்போது இலங்கை சிறைகளில் இல்லை” இவ்வாறு கூறியுள்ளார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது இவரது தகவல்.
மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் கொடுத்திருந்த நோட்டீஸூக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளித்தபோதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் யாரும் கிடையாதா? சிலர் இருக்கிறார்கள் என்று கூறும் அமைச்சர் கிருஷ்ணா, “அவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் படித்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படவில்லை. போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுகளில் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்கிறார்.
“இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்படும் போது, கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதருடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து உதவி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இருதரப்பு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றும் கூறியுள்ளார் கிருஷ்ணா.

No comments:

Post a Comment