Friday, September 07, 2012

புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

TNA-houseசெப்ரெம்பர் 8 ஆம் நாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான தேர்தலாகும். இத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு அதிகப்படியான இருக்கைகளைப் பெற்று கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

என்பது தமிழ் மக்களின் பெருவிருப்பாகும். இத்தேர்தல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் உயிர்களைக் கொன்றொழித்த அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அய்.ம.சு.முன்னணி அரசை ஆதரிக்கிறார்கள் என வெளியுலகுக்கு சொல்ல நினைக்கிறது.
வடக்கையும் கிழக்கையும் இராணுவ மயப்படுத்திஇ சிங்களக் குடியற்றங்களையும் பவுத்த விகாரைகளையும் நிறுவும் சிங்களப் பேரினவாத ஆட்சியை தோற்கடிக்க கிழககு; மாகாண வாக்காளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர்  வாக்குத்தான் எமக்கு  இருக்கும் ஒரே பலம். வாக்குப்பலத்தின் மூலமே அரசியல் பலம் தேட முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குப் பலத்தால்தான் த.தே.கூடட்மைப்பு  தமிழ்  மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் ஒரு பலமான கட்சியாக விளங்குகிறது.
மேலும் த.தே. கூட்டமைப்பைப் பலப்படுத்தி பன்னாட்டு சமூகத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்புத்தான் செப்ரெம்பர் 8ஆம் நாள் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஆகும்.
எனவேதான் இத்தேர்தல் முன்னைய தேர்தல்களிலிலும் பார்க்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தை ஆள வேண்டியவர்கள் தமிழ்பேசும் மக்களே.
இந்த வாய்ப்பை செப்ரெம்பர் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எமது வாக்குப் பலத்தால் எம்மை நாமே ஆளும் அரசியல் பலத்தை அடைவோம்.
எம் ஒற்றுமையைக் காட்டக் கிடைத்த இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்துவோம். எம் ஒற்றுமையைக் குலைக்க முனையும் அனைத்துச் சக்திகளையும் எமது வாக்குப்பலத்தால் முறியடிப்போம்.
எனவே தாயகத்திலுள்ள உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்கவும் அந்த வாக்குகள் முழுவதும் த.தே.கூட்டமைப்புக்குக் கிடைக்கவும் ஆவன செய்யுங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

த.தே. கூட்டமைப்பு (பிரித்தானியா)
த.தே. கூட்டமைப்பு (கனடா).

No comments:

Post a Comment