தமிழ்நாட்டுக்குப்
பயணம் செய்வதைத் தவிர்க்கக் கோரும் பயண எச்சரிக்கை அறிவிப்பை விலக்கிக்
கொள்வது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா
வெளிவிவகாரச்செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர், கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாட்டு நிலவரங்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்காணித்து வருகிறது.
ஆனாலும் அதை விலக்கிக் கொள்வது குறித்த எந்தத் தீர்மானத்தையும் நாம் இன்னமும் எடுக்கவில்லை.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் பயண எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாட்டுக்குச் செல்லும் சிறிலங்கர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், சிறிலங்காவின் விமான சேவை நிறுவனங்கள் சென்னை, திருச்சிக்கான விமான கட்டணங்களைக் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment